குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

21 August, 2009

பூமித்தாயின் புலம்பல் :


எழாமல் இருக்கும் என்னை -
அனைவரும் மிதித்தனர் !
அமைதியாய் இருக்கும் என்னை -
ஆழமாய் தோண்டினர்!


அந்தோ பரிதாபம், நான் அழுதும்
என்னை விடவில்லை அவர்கள்,- எதற்காக ?
என் விழி கண்ணீர் தான் அவர்களுக்கு
குடி தண்ணீராம்!


தாய் கூட பொறுக்க மாட்டாள் !
தொடர்ந்து இவ்வளவு இன்னலை
சகிக்கவும் மாட்டாள். -என்னிடம்
கண்டெடுத்த புதயலோ ஏராளம்.


மனிதா எனக்கு நீ கடன் பட்டவன்,
எப்படி தெரியுமா -உமக்கு ?
என்னிடம் எல்லாம் பெற்று கொண்டு
எனக்கு எதும் செய்யாததே!


செய்த பாவம் எல்லாம் -
செயற்கையை நாடியதே !
அந்த செயல் தான் குஜராத்தை
குப்புற விழ வைத்தது.


மதிகெட்ட மனிதர்களே - நான்
மறந்து மன்னித்துவிட்டேன்,
உங்களது கருமங்களை,
இனியும் தாமதிக்கா
தீர்.


உறிஞ்சிய நீரெல்லாம்
உள்ளகத்தே இல்லாமல்
வருந்தி நான் வாழ்கிறேன்
நட்டு விடுங்கள் மரங்களை.
-செய்து விடுங்கள் அறங்களை.12 comments:

hayyram said...

ஆம், மெய்ஞானமே தவம் , இயற்கையே தெய்வம். கவனம் தேவை இக்கனம்! gud.

அன்புடன் ராம்

Kesavan said...

நன்றி ஹேராம் அண்ணா.

Anonymous said...

நன்றி கேசவன்

நீங்கள் கேட்டவற்றை பற்றிய விளக்கங்களை விரைவில் வெளியிட முயற்சிக்கிறோம். நன்றி


உதயகுமார்
செய்தி தொடர்பாளர்
பதஞ்சலி யோக கேந்த்ரம்

ஜெஸ்வந்தி said...

Beautiful.

Kesavan said...

வலைப்பதிவை பார்வையிட்டமைக்கு நன்றி ஜெஸ்வந்தி அவர்களே!

மனிதன் இயற்கையை மறந்து செயற்கையை நாடிப்போகிறான். அதனை நினைத்து ஒரு பதிவு.

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான வரிகள். புதையலோ என அமைந்திருந்தால் நலம்.

மரம் நட்டு மண் வளம் காப்போம் என சொன்னவிதம் அழகு. மிக்க நன்றி ஐயா.

Kesavan said...

///மிகவும் அருமையான வரிகள். புதையலோ என அமைந்திருந்தால் நலம்///

தவறை மன்னியுங்கள் ஐயா.

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

kggouthaman said...

Good.

கேசவன் .கு said...

/// kggouthaman said...

Good.///

THANK YOU

இராஜராஜேஸ்வரி said...

இய்ற்கையின் வாழ்வாதர்த்தை மீட்டெடுக்க அற்புதமாய் வழிகாட்டும் சிறந்த பதிவு.பாராட்டுக்கள்.

தேவன் said...

தாங்கள் வருகைக்கு நன்றி! இராஜராஜேஸ்வரி அவர்களே.