குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

24 July, 2009

சிவ வாக்கியர் ஞானப்பாடல்

"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?"

-சிவ வாக்கியர் (சித்தர் பாடல்கள்)

02 July, 2009

இரங்கல் செய்தி


உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.- பொதுமறை.

தி.சுந்தரராமன்
*** இருந்தீர் எழுபது வயது இளைஞனாய் ***


சொல்லப்
பயன்படுவோர் சன்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படுவோர் கீழோர்.-பொதுமறை.

என் வாழ்வில் சொல்லப்பயன்படுவோர் வரிசையில் நீங்களும் -நினைக்கையில் -பெருமிதம்.