குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

06 May, 2010

பிண்ணாக்கு சித்தர் _/\_ 1

இது காரணப் பெயராக இருக்கலாம், இருந்தாலும் இவரது பெயருக்கான காரணம் இன்னதென்று தெரியவில்லை. பிண்ணாக்கு சித்தர் என்ற பெயரில் இரு வேறு சித்தர்கள் இருந்திருக்கலாம், அதையே இந்தப் பாடல் உறுதி படுத்துகிறது.

காத்தடைத்து வந்ததிது கசமாலாப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது உப்பிலாப் பொய்க்கூடு 19

இதில் வரும் கசமாலம் என்ற சொல்லில் சென்னை தமிழில் வருகிறது. இதிலிருந்து இவர் பிற்கால பிண்ணாக்கு சித்தர் என்பது புலனாகிறது. அல்லது போகர் குறிப்பிடும் பிண்ணாக்கீசரிலும் இவர் வேறு சித்தராக இருக்கலாம்.

சித்தர் பாடல்களில் இவர் இயற்றியதாக இருக்கும் பாடல்களில் 20 கண்ணிகள் ஒரு தொகுப்பும், 45 பாடல்களில் முப்பூச் சுண்ணச் செயநீர்ப் பாடல்கள் ஒரு தொகுப்பும் கிடைக்கப் பெறுகிறது. எனவே முப்பூச் சுண்ணச் செயநீர்ப் பாடல்களை பாடியது ஒரு பிண்ணாக்கு சித்தர் எனவும், மனோன்மணியாளை பாடியது ஒரு பிண்ணாக்கு சித்தர் என்பதும் ஏற்பிற்குரியது.

இவரது பாடல்கள் ...

தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று
தாவித்திரந்தேளே - ஞானம்மா
சரணம் சரணம் என்றே.1

அஞ்ஞானமும்கடந்து அறிவை மிகச்செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா
விலையிலா ரத்தினமடி 2

முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா
தானுயிரு நிற்பதடி. 3

விட்டகுறைவாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா
தோன்றுமெய்ஞ் ஞானமடி.4

தம்முளம் அறியாமல் சரத்தைத்தெரியாமல்
சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா
சாகரத்திலே உழல்வார்.5

இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா
சொன்னால் வருமோசம்.6


வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....

நல்லோர் பதம் போற்றி!

5 comments:

VSK said...

இப்போதுதான் இதைக் காணும் அருள் கிட்டியிருக்கிறது! இனி அடிக்கடி வருகிறேன்! நல்லதொரு சேவை இது! வணங்குகிறேன் ஐயா!

தேவன் said...

வணங்க வயதில்லாதவன், வாழ்த்து ஒன்றே போதும் ஐயா, தங்களின் வருகைக்கு நன்றி !

http://machamuni.blogspot.com/ said...

தங்கள் வலைப்பூ சிறந்த சேவை செய்து வருகிறது.நம் சித்தர் கலைகள் அழிந்து போகாமல் காப்பது நம் கடமை.இக்கடமை செய்து வரும்,தங்களால் தங்கள் குடும்பம் நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வீர்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

தேவன் said...

தங்களின் அன்புக்கு நன்றி ஐயா, கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

nandakumar07 said...

இறைவன்பால் ஈற்று விட்டீர் உமது பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன