குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

24 April, 2011

ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள்இருபதாம் நுற்றாண்டு இறுதியில் தென் தமிழகத்தில் நினைக்க முக்தி தரும் திருவண்ணமலைக்கு அருகில் போளூர் தாலுகா கலசபாக்கதில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஒரு ஞானி இருந்தார். அவருக்கென்று பேர் கூட கிடையாது. ஜீவ முக்தி அடைவதற்கு முன்பு சில காலம் பூண்டி கிராமத்தில் தங்கி இருந்ததால் பூண்டி மகான் என்றும், பூண்டி சாமியார் என்றும் மக்கள் அழைக்கலாயினர். சேயாற்றின் கரையில் பெரும்பாலும் இருப்பார் என்பதால் பூண்டி மகான் ஆற்றுசுவாமிகள் என்றும் அழைக்கலாயினர்.

வட ஆற்காடு மாவட்டம் வேலூருக்கு தெற்கே செல்லும் நெடுஞ்சாலை பாதையிலுள்ள போளூர் என்கிற நகருக்கு மேற்கேயுள்ள கலசபாக்கத்தில் வாழ்ந்தவர்.இவர் சென்ற நூற்றாண்டின் வாழ்ந்த சித்தர் என்பதால் இவரைப் பற்றி பல அமானுஷ்ய தகவல்கள் போளூர் ,கலசபாக்கம், பூண்டி போன்ற இடங்களில் வாழும் மக்களால் பிரமிப்பாக பேசப்படுகிறது.

நீண்ட தாடியும் தீட்சண்ய பார்வையுமாக மிக எளிமையான மனிதரைப் போல் காட்சியளிக்கும் சித்திரை அவதாரப் புருஷனாக அந்தப்பகுதி மக்கள் பக்தியோடு வணங்கினார்கள். கலசபாக்கம் என்பது ஆற்றங்கரைமான கிராமம் ஆகும். தொடர்ந்து ஒருநாள் முழுதும் மழை பெய்தால் ஆறு முழுதும் வெள்ளம் பெருகி காட்டாறு போல் பொங்கி பெருக்கெடுத்து ஓடும். பூண்டி மகான் அந்த கிராமத்திற்கு வந்தபோது யாரோ ஒரு பித்தன் என்பது போலத்தான் அந்த கிராம மக்கள் பார்த்தனர்.ஆனால் அவருக்குள்ள அமானுஷ்ய சக்தியும், அவர் தந்த திருநீறு மற்றும் மூலிகை இலைகளால் எந்த நோயையும் குணப்படுத்தி அக்கிராம மக்களை காத்து வந்தார். இதனால் பாமரமக்களும், மற்றவர்களும் அவரை தேடியும், நாடியும் வந்து வணங்கி அன்பு செலுத்த ஆரம்பித்தனர். அந்த ஆற்றங்கரை மணல் மேட்டிலே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.

ஒருசமயம், தொடர்ந்து வானம் பெய்த்தால் மழை நின்று போனது. மழை இல்லாத காரணத்தால் பயிர் தொழில், விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் வறுமைச்சூழலில் வேதனையும், அவதியும் பட்டனர், ஊரின் கிராம முன்சீப் கிராம மக்களை ஒன்று கூட்டி , கிராமத்தைக் காப்பாற்றும் படி நாளை மகானிடம் சென்று முறையிடலாம் என்று முடிவு செய்தனர்.

அன்றிரவு.., முன்சீப் மகானிடம் எப்படி கேட்பது....,அவர் தியானத்தால் மழை பெய்யுமா? அவருக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறதா? உண்மையிலேயே அவர் சித்தர்தானா? என்று பலவாறு சிந்தித்த வண்ணம் தூங்கிவிட்டார். நள்ளிரவு..., ஆழ்ந்த தூக்கத்திலிருந்த போது, யாரோ கன்னத்தில் மென்மையாக தட்டுவது போல் உணர..., எதிரே மஞ்சள் நிற ஒளியோடு மகான் நின்றிருந்தார்.

‘’என்ன முனிசீப்.., இந்த மகான் நிஜமாகவே சித்தனா? இவனுக்கு அந்தளவு சக்தி இருக்கா! இவன்கிட்டே போய் கேட்டா மழை பெய்யுமான்னு நினைக்கிறியா? கேட்டார். இது கனவா... நிஜமா என்று உணர்ந்திடும் நிலையில்லாத முன்சீப் இருந்தார்.

”ஐயா..., தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் கடவுள் என நான் நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்..’பணிந்து வேண்டினர்.

’’என்ன முனிசீப் பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க... ஒரு செயலை செஞ்சு முடிக்கறதுக்கு முன்னாடி எப்படி நம்பமுடியும்? இது இயற்கைதானே! சரி... சரி இப்ப எழுந்து உன் வீட்டு வாசலுக்குப் போ நான் நிஜமா பொய்யான்னு தெரியும்...’ என்று சொல்ல அடுத்த நொடி ஏதோ உணர்ந்தவராக முனிசீப் சடாரென எழுந்து உட்கார்ந்தார். அப்படி என்றால் இவ்வளவு நேரம் சித்தர் நம் எதிரில் நின்று பேசியது கனவா? ஆனால்,அது கனவாக தெரியவில்லையே..., நிஜத்தில் நடப்பது போலல்வா இருந்தது ‘’? என்று வியந்து யோசித்தபடி வீட்டு வாசலுக்கு வந்தார்.

அப்போது லேசாக தூறல் விழ ஆரம்பித்தது. அடுத்த சில விநாடிகளில் ‘பளீர்’ என்று மின்னல் வெட்டி மழை வலுக்க ஆரம்பித்தது. கொஞ்ச கொஞ்ச வலுத்த மழை பேய் மழையாகி, இடி மின்னலுடன் பெரும் மழையாகியது.

நள்ளிரவு துவங்கி, விடியல் வரை அடைமழையாய் பெய்ததால் பதினைந்து ஆண்டுகள் மழையின்றிகாய்ந்து கிடந்த ஆற்றில் வெள்ளம் வர துவங்கியது. விடிந்ததும் மனசு முழுக்க சித்தரின் நினைவுகள் நிறைந்திருந்தது. நடந்த விபரங்களை ஊர் மக்களிடம் கூறி, அவரை காண ஆற்றங்கரக்குச் சென்றார்.அங்கே சித்தர் இல்லை. பலவிடங்களில் தேடியும் சித்தர் காணவில்லை. அப்போது கூட்டத்திலிருந்த சிறுவன், ‘’அங்க பாருங்க சாமியார் உட்கார்ந்திருந்த இடத்திலே மண் மூடியிருக்கு..; என்று கூற மண் மூடிய இடத்தை தோண்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் மண்ணுக்கடியில் இருந்த
சித்தரை வெளியே தூக்கி எடுத்தனர். அதிர்ச்சியில் எல்லோரும் நெகிழ்வாக கண்கலங்கி....., சட்டென்று கண் திறந்தார்.

’’போதுமா... நீங்க கேட்ட மாதிரி மழை பெய்துவிட்டது...’’ என்று கூற ஊர் மக்கள் யாவரும் நெகிழ்வாக கரம் கூப்பி வணங்கினர்..

ஊரிலான், பேரிலான் :

எப்பொழுது இந்த பகுதிக்கு வந்தார்?,எங்கிருந்து வந்தார்?, என எவ்வித தகவலும் கிடையாது. அவருடைய பெற்றோர் யார்?, உற்றார் உறவினர் யார்? என எந்த ஒரு செய்தியும் ஒருவருக்கும் தெரியாது.

சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கலசபாக்கம், குருவிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்பட தொடங்கியாதாக சிலர் கூறுகின்றனர். மனம் போன போக்கில் பிச்சைக்காரர் போன்று திரிந்து கொண்டு. எவ்வித ஆன்மிக அடையாளமும் இன்றி இருந்ததால் பொது மக்கள் யாரும் கவனிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை .

அவரது செய்கைகள் சிலருக்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றியது.அவர்கள் அவரை ஏளனம் செய்த போதும் எதிர்ப்போ மறுப்போ கூறாமல் அமைதியாக அங்கிருந்து sendru விடுவார். புற உலக சிந்தனை இன்றி சுயம்பாக இருப்பதை ஒரு சில ஆன்மிக பெரியவர்கள் கவனிக்கலாயினர்.

சுவாமிகளின் பொன்மொழிகள்...

தன் பசித்துன்பத்தைக் போருத்துக்கொல்லுதலும், பிறருக்கு மனதினாலும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவத்தின் வலிமையாகும்.

பணம் எட்டாத உயரமும், பாயாத பாதாளமும் இல்லைதான்; ஆனால் சத்தியம் பணத்தின் நிழலில் தங்கக் கூட தயங்குகிறது.

இடி விழுந்தவனுக்கு சிகிச்சை பலிக்காதது போல, நன்றி மறந்தவனுக்கு என்றும் நன்மை கிட்டாது.

மக்களை மக்களென நினைத்து பணியாற்று செய்கை வந்தாலொழிய நாடு நன்மை பெறாது.

மேகம் கருகி மழை பொழிகிறது. மனிதன் பிறனைக் கருக்கி தானே கெடுகின்றான்.

தன்னிலும் இழிந்த ஒருவனைத் தனக்கு சமமாக நினைத்து தன் கடமையை செய்பவன்தான் பெரிய மனிதனும், அறிவுடையவனுமானவன்.

எல்லோரும் தீய பலன்களிலிருந்து தப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் அவற்றை செய்வதில் எல்லோரும் ஒன்று போல் தயக்கம் காட்டுவதில்லை.

மனிதன் மனதில் பூசை செய்து தான் நினைத்த காரியம் நடக்காததை நினைத்து நொந்து மடிகிறான். மனதில் பூசை செய்வதை விட ஜீவனில் பூசை செய்வதே சிறந்தது.


உதவி :
http://srisivalayam.blogspot.com/2011/01/blog-post.html
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/ec45b08e4da641bd


பூண்டி மகான் திருவடிகள் போற்றி!
குருவடி போற்றி!!
திருவடி போற்றி!!!

11 comments:

KARTHIKEYAN said...

ஐயா வணக்கம் இதுபோன்ற ஞானிகள்தான் உண்மையானவர்கள் ஆனால் நாம்தான் அவரிடம் என்ன சக்திகள் இருக்கும் என்று கேடடு அறிவை இழக்கிறோம், உண்மையான அன்பு இறைவன்மேல் இருந்தால் இவரைப் போன்ற ஞானிகள் நமக்கு வழிகாட்டுவார்கள் ஆன்மாவை அறிய. தவயோகி ஞான தேவ பாரதி சுவாமிகள் அக்கால சித்தர்கள் போல் நம்மிடையே வாழ்கின்ற உண்மையான மகானாக உள்ளார், அவர் நமது ஆன்மாவிற்கும் நமக்கும் மட்டுமே வழிகாட்டுவார், அப்புறம் எம்மை மறந்துவிடுங்கள் என்று வருடத்திற்கு 6 மாத காலம்(அக்டோபர்-மார்ச்) தவம் இருக்கிறார். அவரின் பல கட்டுரைகளை கீழ்கண்ட வளையத்தில் படித்து ஆன்மலாபம் பெற அழைக்கிறோம்.
visit http://thavayogi.blogspot.com/

தேவன் said...

உங்கள் அழைப்புக்கும் அன்பிற்கும் நன்றி ஐயா, வருகைக்கும் நன்றி ஐயா, நான் ஐயாவைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்.

நிச்சயம் அய்யாவை காண வருவேன்... நன்றி...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் தோழரே..

தங்களது மெய்ஞ்ஞான தவத்தை இன்றுதான் கண்ணுறும் பாக்கியத்தை இறைவன் நல்கினான்..

அற்புதமான பதிவுகள்.. தொடர்ந்து படிக்க் வேண்டும்..

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம்..

வாய்ப்பிருக்கும்போது எமது
சிவயசிவ - என்னும வலைத்தளத்திற்கும் எழுந்தருளுங்கள்.

நன்றி

http://sivaayasivaa.blogspot.com

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் தோழரே ..

தங்களது பதிவுகளை மின்னஞ்சலில் பெற
FEED BURNER EMAIL SUBSCRIPTION
என்ற வசதியை இணையுங்களேன்.

பலருக்கும் உதவியாய் இருக்கும்.

நன்றி
http://sivaayasivaa.blogspot.com/

தேவன் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா, கண்டிப்பாக Feedfurner வசதியை இணைக்கிறேன்.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

நன்றி திருவாளர் தேவன் அவர்களே,

இன்னொரு வேண்டுகோள்,

தங்களது வலைத்தளத்தின் பின் புலத்தையும் ( back ground colour )
மாற்றிவிட்டால் படிக்க எளிமையாக இருக்கும்..

வெண்ணிறம் சிறப்பு...

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.

mayanmagesh said...

எனக்கும் பாபாஜியை பற்றி தெரிந்து கொள்ள ஆசை உங்களின் பதிவேற்றதிற்கு நன்றி

மாற்றுப்பார்வை said...

அற்புதமான பதிவு

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...