ஔவையார் ஒரு மிகச்சிறந்த புலவர். இவர் தமிழ்நாடு முழுவதும் நடந்தே சுற்றி திரிந்த
ஒரு ஞானப்பெண். இப்போது இருக்கும் தமிழ்நாடு அந்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் அரசாட்சியின் கீழ் இருந்தது. அப்படி சுற்றித்திரிந்த காலத்தே பாண்டிய மன்னன் அரசவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு சம்பவம்:
ஔவையார் ஒரு சமயம் மதுரையிலே பாண்டியனுடைய அரண்மனைக்கு திருமணத்துக்கு போனார்.
அங்க இருக்குற காவல்காரர்கள் எல்லாம் விவேகம் இல்லாதவர்கள். ஔவையாரை, பழுத்த ஞானக் கிழவியை, உள்ளே அனுமதிக்கவில்லை.
"போ வெளியே! கெழவிகளுக்கெல்லாம் இங்கே என்ன வேலை!"
அவர் தமிழ் பழம்! ஔவையார் ஒன்னும் சொல்லலை. "நல்லது"ன்னார்.
மாலை நேரத்திலே புலவர்களெல்லாம் ஔவையாரைக் கண்டு "அம்மா! பாண்டியர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனியே சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது?"
"வடை, பாயசம், லாடு, ஜாங்கிரி, குலோப்ஜான், ரொம்ப உயர்வாய் இருந்திருக்கனுமே?"
"நீங்கதானே எங்களுக்கெல்லாம் தலைமை! தமிழ்த் தாய்!" என்று புலவர்கள் கேட்டார்கள்.
ஔவையார் சொன்னார் "உண்டேன்! உண்டேன்!"
என்ன உணவு உட்கொண்டீர்கள்?
சொல்வது என்ன? பாடுகிறேன் கேள்.
பாடல் :
வண்டமிழைத் தேர்ந்த வழுதி கல்யாணத்து
உண்டபெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே
சுருக்குண்டேன் சோறுண்டிலேன்.
விளக்கம் :
வண் தமிழை கற்று தேர்ந்த வழுதி திருமணத்திற்கு சென்ற நான் அங்கே நிறைய உண்டேன் அதை சொல்கிறேன் கேள்:
அவனை நாடி உணவருந்தி வரலாம் என்று சென்ற நான் மக்களாலும், என்னை யார் என தெரியாத காவலர்களாலும் நெருக்கப்பட்டேன்(முன்டியடித்
"மூன்று உண்டேன் ஒன்றே ஒன்று உண்டிலேன்"ன்னாரு.
"நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே சுருக்குண்டேன், சோறுண்டிலேன்!"
புலவர்களெல்லாம் சிரித்துக் கொண்டார்கள்."ஔவையாருக்கே இந்த கதியா"ன்னு.
படிச்சவங்க எல்லாம் மறந்துடாம உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
7 comments:
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!
மிகவும் புலமையுடன் எழுதப்பட்ட பாடல், மிகவும் அருமையாக இருந்தது. புதிய விசயம் அறிந்தேன்.
///மிகவும் புலமையுடன் எழுதப்பட்ட பாடல், மிகவும் அருமையாக இருந்தது. புதிய விசயம் அறிந்தேன்.///
ராதாகிருஷ்ணன் ஐயா, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வணக்கம்,
தமிழ் மூதாட்டியைப் பற்றி இன்று ஒரு புதிய தகவல் தெரிந்து கொண்டேன்.நன்றி!
///வணக்கம்,
தமிழ் மூதாட்டியைப் பற்றி இன்று ஒரு புதிய தகவல் தெரிந்து கொண்டேன்.நன்றி!///
நன்றி ஸ்ரீதரன் நண்பரே அதுக்கு நான் துணையா இருந்ததுக்கு இறைக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இது போன்ற பல பாடல்களுக்கும் விளக்கம் எழுதினால் அனைவருக்கும் புரியும்.ஏனென்றால் தமிழ் நன்றாகக் கற்றவர்களுக்கே சில பாடல்களுக்கு பொருள் புரியவில்லை.எனவெ விளக்கத்துடன் எழுதினால் நன்று.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வருகைக்கு மிக்க நன்றி சாமீ ஐயா, ஏதோ எனக்கு தெரிந்தவற்றில் பெரியொர் கவி சிலவற்றிற்கு உரை எழுதினேன் பிழை பொறுக்க வேண்டும்.
Post a Comment