பட்டினத்தடிகள் இயற்றிய நூல்கள்
சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்கலுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:
- கோயில் நான்மணி மாலை
- திருக்கழுமலை முமணிக்கோவை
- திருவிடைமருதூர் திருவந்தாதி
- திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.
எடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம்:
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தாம்
மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்
உண்டென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே
திருவொற்றியூரில் சமாதி
தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. “பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல்யாரும் துறக்கை அரிது” என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர் பட்டினத்தார்.
மேலும் விவரங்களுடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]
7 comments:
எத்தனை கருத்துள்ள பாடல்கள்!
எத்தனை படித்தாலும்
//காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே //
இதுவே நிலையாக இருக்கிறது :(
/// எத்தனை கருத்துள்ள பாடல்கள்!
எத்தனை படித்தாலும்
//காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே //
இதுவே நிலையாக இருக்கிறது ///
சரியாச் சொன்னீங்க போங்க ! அந்தப் பாடல் என்னை மிகவும் பாதித்து விட்டது. நீங்களும் அதையே சுட்டி காண்பித்து இருக்கிறீர்கள்.
நன்றி கவிநயா அவர்களே!
சரிதான்...
நான் சொல்வது உண்மை.. உண்மை தவிர வேறேதுமில்லை..
இந்த பின்னூட்டத்தைப் படிப்பதற்கு முன்னே அதே பாடல் என்னை நிறுத்தி விட்டது.
அந்தப் பாடல் ஒரு மந்திரம்.
//காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்//
நன்றி கேசவன்.
நன்றி ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் அவர்களே ! உங்களின் ரசனை உங்களின் கருத்தின் ஆழத்தில் தெரிகிறது. வருகைக்கு நன்றி.
///Comment deleted
This post has been removed by the author.///
ஏன் நண்பா, திட்டீட்டாரா என்ன?
இல்ல அண்ணா ! எனக்கு பொதுவா அந்த மாதிரி பின்னூட்டங்கள் வந்ததில்லை ! அதுக்கும் கீழே இருக்கிற பதிவர் (ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...) தான் அந்த பின்னூட்ட அதிபர் ! அவர் பாராட்டவே செய்திருக்கிறார்.
Post a Comment