குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

17 April, 2010

கடுவெளி சித்தர் _/\_ 3

வளரும் என் வருகை... கடுவெளி சித்தர் பாடல்களுடன்...

ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

வைதோரைக் கூடவை யாதே: - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26

பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29

பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32

கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

கடுவெளி சித்தர் பாடல்கள் முற்றும்.

நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

4 comments:

Maalini said...

சுத்தமா புரியலைங்க!
பாமரன்

நன்றி!

தேவன் said...

அது என் தவறு இல்லீங்க ??????

தைரியமா சொன்னீங்களே, அதுக்கே ஒரு சல்யூட் , எது புரியல ஏதாவது ஒன்னு புரிஞ்சதா? யோக நெறிமுறையின் கீழ் அமைந்தவை அவைகளை அறியவே அருள் வேண்டும்.

முடிந்தால் முயற்சியுங்கள் இல்லையேல் தொடர்பு கொள்ளுங்கள் ஏதோ என்னால் முடிந்த அளவு விளக்க முயல்கிறேன்.

Mail ID : san198820@gmail.com

Maalini said...

தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
ஒரு பாடலை கொடுத்தாலும் விளக்கம் கொடுத்தால்
(எனக்கும் சேர்த்து) புரியாத பலருக்கும் பயன்படும்.
(Ex:- தோழியின் பதிவு)

எம் கருத்து. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

தேவன் said...

நன்றி முனி அவர்களே உங்கள் அறிவுரைக்கு ஆனால் சித்தர்களின் சிந்தை இதற்கு சிறிதும் அனுமதிக்கவில்லை.

அகத்தியர் ஞான நூலில் "பரிபாஷை அறியா உலக மூடர்" என்கிறார். முதலில் ஆழ்தமிழ் கற்க வேண்டும் என்று நானே முயற்சியில் இறங்கி விட்டேன்.

தோழியின் அளவிற்கு நான் தமிழ் கற்கவில்லை என்றாலும் யோக நெறிமுறையின் கீழ் அமைந்த பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் எனக்கு கொஞ்சம் எளிமையாகத் தான் தெரிகின்றன.

முடிந்தால் இனிமேல் கொஞ்சம் விளக்க முயல்கிறேன்.