வளரும் என் வருகை... பிண்ணாக்கு சித்தர்  பாடல்களுடன்...
முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
     நித்திரையும்விட்டு - ஞானம்மா
     நினைவோடு இருக்கணுமே.7
 
நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
     சினமாய்வரும் எமனும் - ஞானம்மா
     தெண்டநிட்டுப் போவானே.8
 
யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல்
     மோகம் எனும் குழியில் - ஞானம்மா
     மூழ்கியேபோவார்கள்.9
 
சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
     ஆத்திதேட நினைத்து - ஞானம்மா
     அலைவார் வெகுகோடி.10
பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும்
     ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா
     ஏதொன்றும் இல்லையடி.11
 
கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
     கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா
     கலங்கி அழுதாரடி.12
 
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
     நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா
     நலிந்தே அழுவாரடி.13
கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
     தேவமாதா இரவல் - ஞானம்மா
     தெரியாதே அலைவாரே.14
 
செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
     உத்தமர்போலப் பேசி - ஞானம்மா
     உலகில் திரிவாரடி.15
 
காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும்
     காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா
     கண்டறிதல் ஆகாதே.16
 
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
     இல்லாவெளிச்சமது - ஞானம்மா
     ஈனவெளிச்சமடி.17
 
சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
     இம்சையடைவோர்கள் - ஞானம்மா
     இருந்து பயன் ஆவதென்ன.18
 
காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
     ஊத்தச் சடலமிது - ஞானம்மா
     உப்பிலாப் பொய்க்கூடு.19
 
அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி
     சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா
     தானமைத்த பொய்க்கூடே.௨0
பிண்ணாக்கு சித்தர் தாள் போற்றி !
நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!
[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]
7 comments:
his Samadhi is at Chennimalai, Erode.
சித்தர் பாடல்கள் அனைத்தும் அருமை, ஞானம் புகட்டும்! இறைவனடியிலும் சேர்க்கும்!
// Anonymous said... //
அனாமிக்கு நன்றி, இரு வேறு சித்தர் என்பதால் இந்தப் பதிவில் அதை குறிப்பிடவில்லை. வருகைக்கு நன்றி.
/// snkm said... ///
ஒப்புமை இல்லாத உயர்வை பாராட்டியமைக்கும், வருகைக்கும் நன்றி ஐயா
இவரது சமாதி, திருப்பூரிலுள்ள சென்னிமலையில் உள்ளது.
@ ஜகதீஷ்
ஒரே பெயரில் இரு வேறு இருப்பதால் அதனை தெரிவிக்கவில்லை. எனினும் பகிர்ந்தமைக்கு நன்றி ! கருத்திட்டமைக்கும் நன்றி !!
நல்லதை கண்டேன் நன்றி
Post a Comment