குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

18 June, 2010

கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\_ 2

யோகம்வந்து மகிழ்வதும் விளையாட்டே - அதன்
உண்மைதெரி யாததுவும் விளையாட்டே
சாகசஞ் செய்வதுவும் விளையாட்டே - ஒருவர்
தஞ்சமென்று நினைப்பதுவும் விளையாட்டே.17

கோடிபணந் தேடுவதும் விளையாட்டே - அதைக்
குழிவெட்டிப் புதைப்பதுவும் விளையாட்டே
தேடியலைவதும் விளையாட்டே - மனந்
தேறுதலாய் திரிவதும் விளையாட்டே.18

கற்பனையுங் கபடமும் விளையாட்டே - அதைக்
காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே
சற்பங்க ளாட்டுவதும் விளையாட்டே - ஒரே
சாதனையாய்ப் பேசுவதும் விளையாட்டே.19

நம்பினோருக் காசைசொல்லல் விளையாட்டே - பின்பு
நாட்டாற்றில் போகவிடுதல் விளையாட்டே
கும்பிக் கிறைதேடுதல் விளையாட்டே - கடன்
கொடுத்தாரைக் கெடுத்தலும் விளையாட்டே.20

இச்சையால் மயங்குவதும் விளையாட்டே - அதை
இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே
பிச்சையெடுத் துண்பதுவும் விளையாட்டே - பொல்லாப்
பேய்போ லலைவதுவும் விளையாட்டே.21

முத்தி யறியாததும் விளையாட்டே - மேலாம்
மோட்சங் கருதாததும் விளையாட்டே
பத்திகொள் ளாததுவும் விளையாட்டே - மனம்
பாழிற் செலுத்தினதும் விளையாட்டே.22

கேடு வருவதுவும் விளையாட்டே - எதற்கும்
கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே
பாடு வருவதுவும் விளையாட்டே - மனப்
பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே.23

பாசவினை போக்காததும் விளையாட்டே - பெண்
பாவாயென் றழைப்பதும் விளையாட்டே
நேசமாய்த் தேடுவதுவும் விளையாட்டே - காணாமல்
நிமிடநேர மென்பதுவும் விளையாட்டே.24

நித்திரையிற் சொக்குவதும் விளையாட்டே - அதில்
நினைவுதடு மாறுவதுவும் விளையாட்டே
சித்தியடை யாததுவும் விளையாட்டே - ஞானம்
சிந்தியா திருப்பதுவும் விளையாட்டே.25

சொற்பனமுண் டாவதுவும் விளையாட்டே - மனம்
சொக்கா திருப்பதுவும் விளையாட்டே
விற்பனங்கண் டறிவதும் விளையாட்டே - வந்த
விதமறி யாததுவும் விளையாட்டே.26

பகலிர வென்பதுவும் விளையாட்டே - இகப்
பயனடைந் திருத்தலும் விளையாட்டே
சகவாழ்விற் சிக்குவதும் விளையாட்டே - யோக
சாதன மறியாததும் விளையாட்டே.27

புத்திமா னென்பதுவும் விளையாட்டே - இப்
பூதலத்தோ ரேத்துவதும் விளையாட்டே
வெற்றி யடைவதுவும் விளையாட்டே - நான்
வீரனென்று சொல்வதுவும் விளையாட்டே.28

தவநிலை தோணாததும் விளையாட்டே - ஞான
தத்துவந் தெரியாததும் விளையாட்டே
பவமது போக்காததும் விளையாட்டே - ஏக
பரவௌி காணாததும் விளையாட்டே.29

யோகந் தெரியாததும் விளையாட்டே - அதன்
உண்மைதனைக் காணாததும் விளையாட்டே
பாகம் அறியாததும் விளையாட்டே - இகப்
பற்றுக்காது இருப்பதுவும் விளையாட்டே.30

பெரியோரைக் காணாததும் விளையாட்டே - கண்டு
பேரின்பஞ் சாராததும் விளையாட்டே
தெரியா திருந்ததுவும் விளையாட்டே - சிவ
தேக நிலை பாராததும் விளையாட்டே . 31

அஞ்ஞானமுட் கொண்டதுவும் விளையாட்டே -பே
ரறிவாற் றெரியாததும் விளையாட்டே
மெய்ஞ்ஞானங் காணாததும் விளையாட்டே - இந்த
மேதினியே போதுமெனல் விளையாட்ட. 32


வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....

நல்லோர் பதம் போற்றி!

திருவருள் போற்றி ! குருவருள் போற்றி !!

10 comments:

வல்லவன் மதுரை said...

இவரது பாடல்கள் அருமை. வெளியிட்ட உங்களுக்கு நன்றி

தேவன் said...

வ(ந)ல்லவன் வருகைக்கு வாழ்த்துக்கள் பல.....

கருத்துக்களுக்கு நன்றிகள் பல.......

நாடி நாடி நரசிங்கா! said...

வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....:))

Thanks! great

தேவன் said...

// நரசிம்மரின் நாலாயிரம் said...//

வருகைக்கு நன்றிகள் பல.

Sweatha Sanjana said...

மலைவாசி பெண்ணை நிர்வாணமாக்கிய கொடூரங்கள் ! www.jeejix.com ஜீஜிக்ஸ்

http://machamuni.blogspot.com/ said...

அன்புள்ள தேவன் அவர்களுக்கு,
அருமையான பாடல்கள்,கருத்துக்கள் பொதிந்த சித்தர் பாடல்களை வெளியிட்டு புண்ணியம் தேடிக் கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு தெரியாமலேயே!வாழ்க உங்கள் தொண்டு.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

தேவன் said...

வலைப்பதிவை பார்வையிட்டமைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி சாமீ ஐயா.

Anonymous said...

Arumai!Arumai!
Ithuvum Vilayatte!!!

Muthukumar S

பித்தனின் வாக்கு said...

good article. first time hearing about him

nandakumar07 said...

You have more I will continue