[தொடர்ந்த நடை...]
அந்த நொடி,ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது.
‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன்.
சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’
‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’
‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?’’ ஜோகி கேட்க,
சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான்.
சில…….வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான். குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர். சிஷ்யன் ஜோகியோ தனக்குள் இருக்கும் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார்.
ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம்! அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே? பாம்பாட்டி சித்தரும் ஜெகஜால சித்தரானார்.
எச்சில் உமிழ்ந்து, அந்த உமிழ் நீரில் தங்கம் செய்வதிலிருந்து, குப்பென்று ஊதி, ஊதிய வேகத்தில் காற்று விசையால் ஒருவரைக் கீழே விழவைப்பதுவரை அவரது சாகசங்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போயிற்று. ஆனாலும், அவர் அவைகளைப் பெரிதாகக் கருதாமல், யோகத்தைத்தான் பெரிதாகக் கருதினார். உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.
ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர்.
அந்த நொடியில்…..உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது?
போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.
அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.
பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள். கார்த்திகை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்ததாக இவர் பற்றி தெரியவருகிறது. இவர், ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்.
மேலும் இவர் எழுதிய பாடல்கள் புகழ் பெற்றவை.
அதில் ஒன்று உடம்பை பற்றி இவர் சொல்லும் ஒருபாடல் இதோ !
" ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பே "
குழந்தையை உலகிற்குத் தரும் குழியிலிருந்து, ஐம்பூதங்களில் ஒன்றான
மண்ணைஎடுத்து உதிரப் புனலில் ( இரத்தநீரில்) குழைத்து குயவனாகிய ஈசன் கொடுத்த உடலாகிய இம்மட்பாண்டம் உடைந்துவிட்டால் உபயோகமற்ற மண்ணோட்டிற்குக் கூடப் பயன்படாது என்று ஆடு பாம்பே !!
இன்னும் பாடல்களுடன் .....
[நடை போடுவோம்......]
10 comments:
மிக அருமையாக இருக்கிறது, தொடருங்கள்!
/// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
மிக அருமையாக இருக்கிறது, தொடருங்கள்! ///
வருகைக்கு நன்றி! பெயர் சொல்ல விருப்பமில்லை ...
நன்று தொடருங்கள். நல்ல விசயம்.
/// பித்தனின் வாக்கு said...
நன்று தொடருங்கள்.
நல்ல விசயம்.///
வருகைக்கு நான்றி !
பித்தனின் வாக்கு அவர்களே !!
//நடை போடுவோம்....//
ம்ம்ம் .... கதையை சொல்லுங்க கேட்டுக்கிட்டே, நாங்களும் சேர்ந்து நடை போடுறோம்.
/// Anonymous said...
ம்ம்ம் .... கதையை சொல்லுங்க கேட்டுக்கிட்டே, நாங்களும் சேர்ந்து நடை போடுறோம். ///
இந்த கதை முடிஞ்சிருச்சுங்க இனி பாம்பாட்டி சித்தரோட ஞானப் பாடல்கள் தான் !!
நன்றாக கதை சொல்கிறீர்கள். சித்தர் பாடல்கள் படிக்க ரொம்ப பிடிக்கும். இனி அடிக்கடி வருவேன். மிக்க நன்றி.
நன்றி ! கவிநயா !!
எனக்கு மிக பிடித்த இவருடைய ஒரு பாடல் இதோ
"நாடு வீடு நகர நற்பொருள் எல்லாம்
நடுவண் வரும்பொது நாடி வருமோ?
கூடு போனபின் அவற்றால் கொள் பயன் என்னோ .யானை சேனை தேர் பரி யாவும அணியாய் யமன வரும்போது துனையாமோ அறிவாய்"
" முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும் முதிர்ச்சுவை பண்டகளும் முந்தியுண்டவையாய் மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க மெய்யாய் கண்டோமேமென்று ஆடு பாம்பே"
///பிரவீன் குமார் said... ///
"நாடு வீடு நகர நற்பொருள் எல்லாம்
நடுவண் வரும்பொது நாடி வருமோ?
வருகைக்கு நன்றி! நல்ல வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி பிரவின் அவர்களே !
Post a Comment