குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

14 February, 2010

அழுகணிச் சித்தர் பாடல்கள் 1

இவர் பாடல்கள் அனைத்தும் ஒப்பாரி போல அமைந்து இருப்பதால் அவருக்கு அழுகணி சித்தர் என பெயர் வந்திருக்கலாம் என கூறுவர்.

இவர் பாடல்களில் இருக்கும் அழகையும், அணியையும் காரணமாக் வைத்து அவருக்கு அழகணி சித்தர் என பெயர் வந்து அதுவே மருவி அழகுனி சித்தர் என மாரியதாக் கூறுவார். இவர் பாடல்கலில் அழுகன்னி, தோழுகன்னி மூலிகைகளை மிகுதியாக கையாண்டுள்ளார்.

இவர் பெயரில் 32 கலிதாழிசைகள் உள்ளன. வாசியோகம் ,காய சித்தி முறை பற்றி இவர் பாடல்கள் விளக்குகின்றன. இவர் அழுகணி சித்தர் பாடல், ஞான சூத்திரம் , அழுகன் யோகம், அழுகன் வைத்தியம் போன்ற நூல்களை படைத்துள்ளார்.

இவர் நாகப்படினத்தில் உள்ள சிவ பெருமான் கோயில் வளாகத்தில் சமாதி அடைந்துள்ளார்.

பாடல்கள்

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
விளையாட்டைப் பாரேனோ! 1

எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!
நிலைகடந்து வாடுறண்டி! 2

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா!
கோலமிட்டுப் பாரேனோ! 3

சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ! 4

பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ! 5

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ! 6

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ! 7

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ! 9

பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ! 10

கடைசி பாடலுக்கான பொருள்: பையூர் - கருப்பை, மெய்யூர் - மோட்சம் (அழிவில்லாத ஞானம்)பாழூர் - இந்த உலகம்


[இன்னும் பாடல்கள் வளரும்.....]

3 comments:

Pushparagam said...

படிக்க பாதுகாக்க, நல்ல
விஷயங்கள் அளிப்பதற்க்கு நன்றி.
அன்புடன் ராகவன்.வ

தேவன் said...

வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி ஐயா !

Anonymous said...

ஐயா. பாடல்கள் சரி. அவைகளின் அர்த்தம் தந்தால் நன்றாக் ஐருக்கும். நன்றி.
ரங்கனாதன்.